தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோணா காரணமாக மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் பாடத்திட்டங்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படும். மேலும் இதுவரை நடத்தாத பாடங்களை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.