தமிழகத்திற்கு நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சியில் எந்தவித மாற்றமும் இன்றி அதே நிலையிலேயே நீடிக்கிறது. தெற்கு வங்கக்கடலில் 5.8 கிலோ மீட்டர் உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டு வந்த நிலையில் அது உருவாக மேலும் காலதாமதம் ஆகும் என தற்போது தெரியவந்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.