Categories
மாநில செய்திகள்

BREAKING : குழந்தைக்கு கூட தெரியும்… ஆதரிக்கிறீர்களா?… வெளியேறிய அதிமுக, பாஜக..!!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை ஏற்க மறுத்து சட்ட பேரவையிலிருந்து பாஜக அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் கொண்டுவந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்.. அதனை எதிர்த்து போராட்டமும் நடைபெற்று வருகிறது. “3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது; இந்த சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

3 சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும்  உகந்ததாக இல்லை.. விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.. வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்..

அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் கூறியதாவது : அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம்.  அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்க வேண்டும் என்றார்..

எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் கூறியதாவது : “வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம். பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தை கொண்டு வரலாம். உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்..

இதனையடுத்து அவை முன்னவர் துரைமுருகன் கூறியதாவது : வேளாண் சட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து குழந்தைக்கு கூட தெரியும்; ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா ?” என்று  ஓ.பன்னீர்செல்வத்துக்கு கேள்வி எழுப்பினார்.. அதனை தொடர்ந்து வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்..

Categories

Tech |