இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் Arema FC மற்றும் Persebaya Su அணிகள் மோதிய ஆட்டத்தில், Arema FC அணி தோல்வியடைந்தது. இதனால், ஏமாற்றமடைந்த Arema FC அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றும் 127 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories