Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: கேரளாவில் நிலச்சரிவு – 80 பேரை காணவில்லை …!!

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80 பேர் சிக்கி காணாமல் போனதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 4 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல்வேறு  சின்ன அணையில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக கேரளாவில் மழை காரணமாக  மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கொடுமுடி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் தொடர்ந்து வரிசையாக மலை அடிவாரத்தில் குடியிருப்பு உள்ளது. நேற்று இரவு  மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகளுக்கு மேலே உள்ள மலை மிகப்பெரிய அளவுக்கு சரிந்து விழுந்து அனைத்து வீடுகளையும் மூடியதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இன்று காலை தான் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது.இதனால்  20க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

80 பேரை காணவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதுவரை பார்த்தோம் என்றால் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை, வருவாய்த் துறை மற்றும் அரசு அதிகாரிகள் எல்லாம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |