கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் உயர்த்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்ந்து ரூ.1018.03 ஆகவும், வணிக உபயோக சிலிண்டர் 8 ரூபாய் உயர்ந்து ரூ.2507 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories