அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி க்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது. அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் சோதனை நடைபெற்று வருகிறது. அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே சி வீரமணி.
அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார் அளித்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்த நிலையில், தற்போது மூன்றாவதாக கே சி வீரமணி வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.