மாண்டஸ் தீவிர புயலாக நீடிக்கும் மாண்டஸ் புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 350 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 270 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை வரை தீவிர புயலாக நீடிக்கும். அதன்பிறகு தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிழக்கும். நள்ளிரவு முதல் புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே 65 – 85 கிமீ வேகத்தில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கனமழை காரணமாக 26 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.