கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்வாசிலாந்து நாட்டின் பிரதமர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போதும் உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் அதற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் தற்போது வரை முக்கிய பிரபலங்கள், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஸ்வாசிலாந்து நாட்டின் பிரதமர் அம்புரோஸ் லாமினி(52) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொழிலதிபரான இவர் கடந்த 2018ல் பிரதமராக நியமிக்கப்பட்டார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.