மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கடந்த வாரம் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தான் நலமுடன் இருப்பதாக கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்றும், சில டெஸ்ட்டுகள் மட்டும் உள்ளது, அந்த டெஸ்ட் ரிசல்ட் இந்த வாரம் வந்து விடும், மற்றபடி அவர் நலமுடன் தான் இருக்கிறார் என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்து விட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் நாளை மறுநாள் வரை மருத்துவமனையில் இருப்பார் என்றும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் தனது வழக்கமான பணிகளை கவனிப்பார் என்றும் தெரிவித்துள்ளது.