சீனாவின் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்தது. ஏறக்குறைய ஒன்றேகால் வருடங்கள் உலக நாடுகளை திணற வைத்த கொரோனா சற்று ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்க துவங்கியுள்ளது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது அதிகரித்தது அரசுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுதும் நடைபெற உள்ள அனைத்து விதமான உள்ளூர் கிரிக்கெட் தொடரை ரத்து செய்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது மேலும் சூழலைப் பொறுத்து ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் என பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.