பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை இன்று காலை சிரித்துக்கொண்டார்.
சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அதிக அளவு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. முதலில் முன் களப் பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்ட கொரோனா தடுப்பூசி, இன்று முதல் அனைவருக்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி முதற்கட்ட கொரோனா தடுப்பு ஊசியை இன்று காலை செலுத்திக் கொண்டார். டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு ஊசியை என்று போட்டுக் கொண்டார்.