Categories
அரசியல்

Breaking: கொரோனா தடுப்பூசி… மக்களுக்கு அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் செயல்முறை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. தற்போது தடுப்பூசி  ஒரு சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி போடும் செயல்முறை விளக்கம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். ரத்த அழுத்தம் மற்றும் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் தடுப்பூசி போடப்படும். பிறகு அரை மணி நேரத்திற்கு கண்காணிக்கப்படுவர். கொரோனா தடுப்பூசி போடபட்டவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |