Categories
மாநில செய்திகள்

BREAKING: கொரோனா நோயாளிகளுக்கு கடைசி ஒரு மணி நேரம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் தேர்தல் நடத்துவதற்கான முக்கிய கட்டுப்பாடுகள் அனைத்தும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால் வாக்களிக்க வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சையில் உள்ள நபர்கள் PPE கிட் அணிந்து கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |