Categories
மாநில செய்திகள்

BREAKING: கொளத்தூர் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!!!1

கொளத்தூர் பகுதியில் மூன்றாவது நாளாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தி வருகிறார்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமடைந்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்றும் மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

கொளத்தூர், வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் மருத்துவ முகாம்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். நீர்நிலைகளை ஆய்வு செய்து மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |