கோடநாடு வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சஞ்சய் பாபா மாற்றப்பட்ட நிலையில், கொடநாடு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதியாக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது புதிய நீதிபதியான முருகன் சென்னை தொழிற்சாலை தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரியாக இருந்தவர்.. தமிழகத்தில் 58 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் சாய் பாபாவும் ஒருவர் ஆவார்.
கொடநாடு வழக்கின் மேல் விசாரணையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் விசாரித்து வந்த சஞ்சய் பாபா உதகையில் இருந்து தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.. கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.