தமிழகத்தில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், திருக்கோயில் நிர்வாகமே அதற்கான தொகையை வழங்கும் என்றும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.. மேலும் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்..
திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் மொட்டை அடிக்கப்பதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தங்களது வேதனையை சொல்லிவந்தனர். இந்த நிலையில் இந்த முக்கியமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..