புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடந்ததால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இந்நிலையில், வடத்தை வேகமாக இழுத்ததால் திடீரென தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories