திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.