கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவை அடுத்து இந்தியாவின் கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து தமிழகம் வரும் கோழிகள், வாத்துகள், முட்டைகளுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து கோழிகுஞ்சுகள், முட்டைகள் தீவனம் பெற உரிய அலுவலர்களிடம் முறையாக சான்றிதழ் பெற்ற பிறகே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் கோழிகளில் பெரிய அளவில் திடீர் இறப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் 9445032504, 0422-2397614 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.