கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் ஏற்கனவே ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், உறவினர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் வாட்ஸ்அப் ஷாட்கள் வெளியாகி வருகிறது.