Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை மாணவி தற்கொலை வழக்கு… பள்ளி முதல்வர் கோவை மத்திய சிறையில் அடைப்பு…!!!

பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத மாணவி வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை நவம்பர் 26 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரவை தொடர்ந்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

 

Categories

Tech |