Categories
மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவின் பினாமிதாரர்கள் என சொத்துக்கள் முடக்கப்பட்ட வழக்கு… சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி…!!!

சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சசிகலாவின் பினாமி எனக்கூறி தனது சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்ததாக வி.எஸ்.ஜே.தினகரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சசிகலாவின் வீடு உட்பட்ட பல இடங்களில் சோதனை செய்தனர். அப்போது வி எஸ் ஜே தினகரன் என்பவர் சசிகலாவின் பினாமி என்று கூறி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்தனர்.

நிதி நிறுவன உரிமையாளரான வி.எஸ்.ஜே.தினகரன் பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தில் ஒரு கடை மற்றும் 11 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்கியிருந்தார். அதை அனைத்தையும் வருமானவரித் துறையினர் முடக்கினர். இதை தொடர்ந்து சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டதாக கூறி வருமானவரித்துறை தன் மீது தவறாக நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |