பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகியது. ஆனால் அதில் சிறிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. சசிகலா விடுதலை செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் சசிகலாவின் வரவேற்பு தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று குழப்பம் எழுந்துள்ளது.
இந்நிலையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் விரைந்துள்ளனர். வருகின்ற 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆக உள்ள நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது சசிகலா ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.