சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அதிமுக செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று ஈபிஎஸ் மற்றும் மற்ற எம்எல்ஏக்கள் கூறும் நிலையில், ஓபிஎஸ்யின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முடிவு செய்தால் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கலாம்; சசிகலாவை எதிர்த்தே ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். மேலும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என ஓபிஎஸ் தான் கூறினார். ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு தான் நான் தற்போது விளக்கம் அளிக்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.