Categories
தேசிய செய்திகள்

BREAKING: சசிகலா உடல்நல பாதிப்பு… பரபரப்பு புகார்…!!!

சிறையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ஆனால் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவக்குழு பெங்களூர் சிறைக்கு விரைந்தது. அங்கு சசிகலாவுக்கு லேசான காய்ச்சல் இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வழக்கறிஞர் ராஜராஜன் புகார் அளித்துள்ளார். விடுதலையாக சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் முக்கிய புள்ளியான சசிகலாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரி மாநிலத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |