ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என சசிகலா மற்றும் தினகரன் பற்றி முதல்வர் பழனிசாமி மறைமுகமாக பேசியுள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என சசிகலா மற்றும் தினகரன் பற்றி மறைமுகமாக பேசியுள்ளார். ஒரு குடும்பம் ஆள்வதற்கு ஒருபோதும் அதிமுக தலை வணங்காது. அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சியை கைப்பற்ற சதி செய்து வருகின்றனர். அடிமட்ட தொண்டர் தான் இனி அதிமுகவில் முதல்வராக முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.