சசிகலா வருகையின்போது பொது அமைதியை பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருக்கிறார். இதையடுத்து அவருடைய ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா வருகைக்கு காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது புதிய பரபரப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் நோக்கங்களுக்காக குறிப்பிட்ட அமைப்பினர் பெருந்திரளாக கூட்டம் கூட்ட திட்டமிட்டுள்ளனர். பிற அமைப்பினரை போல்(அதிமுகவினரை ) பாவித்து கூட்டம் கூடுவது சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும். போக்குவரத்து, பொது அமைதியை பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.