நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. ஆனால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற முனைப்புடன் செயல்பட்ட அதிமுக தோல்வியை சந்தித்தது. அதிமுகவின்இந்நிலையில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா திடீரென்று தற்போது மீண்டும் வருவேன் என்றும், எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறினேன் என்றும் அவ்வப்போது அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசி வருவதால், அசசிகலாவுடன் பேசிய அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ்-இபிஎஸ் அதிரடியாக நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஜூலை 9ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ் -இபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இவ்வாறு சசிகலா தொடர்ந்து அதிமுக தொண்டர்களுடன் போனில் பேசி வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்தும், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.