Categories
தேசிய செய்திகள்

BREAKING: சட்டத் திருத்த மசோதா…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அதிரடி அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுகளுக்கு ஓபிசி பட்டியலை மாற்றியமைக்க சட்டத்தில் இடமில்லை என கடந்த மே மாதம் தீர்ப்பளித்திருந்தது. மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும், மராத்தா இட ஒதுக்கீடு விவகாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்தது.இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து 127 வது சட்டத்திருத்தம் அரசிதழில் வெளியாகியுள்ளது. அரசியல் சாசனத்தின் 127 வது சட்டத் திருத்தத்தால் ஓபிசி பட்டியலை மாநில அரசுகள் தயார் செய்து கொள்ள தடை இல்லை. சிவசேனா உள்ளிட்ட பல கட்சிகளின் கோரிக்கை படி சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |