Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சட்டப்பேரவையில் பரபரப்பு – முதல்வர் ஸ்டாலின் சரவெடி…!!!

தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது. சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறுவதை சமூகக் குற்றமாக பார்க்கக்கூடாது. ஒன்றிய அரசு என்ற சொல்லையே தமிழக அரசு தொடர்ந்து பயன்படுத்தும், பயன்படுத்துவோம் என்றார். மேலும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு பாஜக குரல் கொடுக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |