கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்த வருடத்துக்கான மகர விளக்கு பூஜை வருகிற 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மகர விளக்கு விழா நாட்களில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்வதற்கு உடனடி முன்பதிவு செய்வோர் அனைவரும் தற்போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
தற்போது பூஜைகளிலேயே அதிக கட்டணமாக ஒருவருக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்டணமுள்ள “படி பூஜை”யின் முன்பதிவு வரும் 2040ம் ஆண்டு வரை முடிந்தது. மகரவிளக்கு பூஜை காலம் முடியும் ஜனவரி 20ஆம் தேதி வரை படி பூஜை நடத்த திட்டமிட்டிருப்பதாக திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.