Categories
தேசிய செய்திகள்

BREAKING: சபரிமலை பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை…. சற்றுமுன் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சபரிமலை பம்பை ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடுகிறது. தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று பத்தின திட்டம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த சமயங்களில் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |