Categories
மாநில செய்திகள்

BREAKING : சம்பள உயர்வு….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….. ஊழியர்கள் மகிழ்ச்சி….!!!!

கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவு விற்பனை சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் சார்பில் ரேஷன் கடைகள் சிறிய பல்பொருள் அங்காடி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் எழுத்தாளர், கணக்கர், காசாளர், உதவியாளர் உள்ளிட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த பணிகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1.1.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கூட்டுறவு சங்கங்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக 2,259ம், அதிகபட்சமாக 14,815 ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |