உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்தார். இத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றே கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சிந்துவுக்கும் தற்போதைய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னிக்கும் போட்டி நிலவிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories