கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உங்களில் பலருக்கு இப்போது YouTube ஐ அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம் – எங்கள் குழுவும் கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து கோளாறை விரைவில் சரிசெய்து 30 நிமிடத்தில், விரைவாக மீண்டும் சேவை வழங்குவோம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செயலிகள் மீள தொடங்கியுள்ளது. சர்வர் கோளாறுகளை கூகிள் சரி செய்தது.