Categories
தேசிய செய்திகள்

BREAKING : சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தனது மரபணுவில் மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸாக உருமாறுகிறது. தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது. இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் உலக நாடுகளுடனான சர்வதேச விமான போக்குவரத்து டிசம்பர் 15ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு சர்வதேச விமான போக்குவரத்து சேவை தொடங்க இருந்த நிலையில் தற்போது ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து சேவையை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

Categories

Tech |