Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் – அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இதற்கு மத்தியில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா? என்ற குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இனி கர்ப்பிணி பெண்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவின் செயலியில் பதிவு செய்தோ (அ) அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு நேரில் சென்றோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி தொடர்பாக தேசிய தொழில்நுட்ப ஆலோசனையை ஏற்ற கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட அனுமதித்துள்ளது.

Categories

Tech |