மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகிய நிலையில் கமலஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகுவதாக கூறியிருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ” சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களை எடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன். கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார்.
ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரி கொடுத்து அவர்களின் முகங்களில் எடுத்துக் கொள்ள துணிந்தார். கட்சிக்காக உழைக்க தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும் திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மையத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர். தன்னுடைய திறமை இன்மையும், நேர்மையின்மையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.