தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடக்க இருந்த வாய்மொழித் தேர்வுகளில் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அதன்படி துறைத் தேர்வர்களுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான VIVA-VOCE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நான்கு நாட்களில் நடைபெற இருந் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.