தமிழகத்தில் நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நெல்லை கூடங்குளம் மற்றும் பெருமணல் உள்ளிட்ட பகுதிகள், கன்னியாகுமரி லீபிரம், பெற்றியால்விளை உள்ளிட்ட பகுதிகளில் ஐந்து வினாடிகளுக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒற்றையால்விளை பகுதிகளில் நில அதிர்வால் நடந்து சென்றவர்கள் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.
Categories