தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணிநீக்கம், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் 17ஏ, 17பி பிரிவின் கீழ் எடுத்த நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.