Categories
மாநில செய்திகள்

BREAKING: அமுதா ஐஏஎஸ்… சற்றுமுன் தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார்.அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ் சமீபத்தில் மாநிலப் பணிக்கு திரும்பிய நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலாளராகவும், கிருஷ்ணன் ஐஏஎஸ் தொழில் துறையில் கூடுதல் தலைமை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |