Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: சற்றுமுன் மருத்துவமனையில் திடீர் அனுமதி…  பரபரப்பு..!!! 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |