கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளும், விளைநிலங்களை சேதம் அடைந்தன. கனமழையின் போது பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசித்த நபர்கள் நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு வழி காட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குமரி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்துள்ள கூரை வீட்டிற்கு தலா ரூபாய் 4,100, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.