தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
அந்தவகையில் அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். -2012 2021 பிப்ரவரி வரை அவதூறாக பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் விஜயகாந்த், பிரேமலதா, ஈவிகேஎஸ், விஜயதாரணி, ஜி.ராமகிருஷ்ணன், திமுகவின் கே.என் நேரு, கனிமொழி, தயாநிதி உள்ளிட்டோர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.