Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!! எத்தனை காலிப்பணியிடம்….?

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இனி அரசு வேலைகளுக்கு தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என்ற அரசாணையை சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வி இலட்சக்கணக்கானவர்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதில், 2022-ல் நடத்தப்பட உள்ள தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் வெளியிட்டுள்ளார். அதன்படி 2022 பிப்ரவரியில் குருப் 2 தேர்வுகள், மார்ச் மாதம் குருப் 4 தேர்வுகள் நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும் அட்டவணை வெளியாகி  75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் . ஆப்ஜெக்டிவ் முறையில் இந்தத் தேர்வு நடைபெறும் குரூப்-2, 2 ஏ தேர்வு காலிப்பணியிடம் 5,831.  குருப் 4 -ல் பழைய காலிப்பணியிடம் 5,255 என்று தெரிவித்துள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடுகள் நிகழாதவாறு ஓஎம்ஆர் தாள்கள், மை, விடைத்தாள் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |