Categories
தேசிய செய்திகள்

BREAKING : சற்று நேரத்தில் தீர்ப்பு…. வரலாற்றில் முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டில் நேரலையில் வழக்கு விசாரணை..!!

உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் இலவசங்களை அறிவிக்க தடை கோரி பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம். தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு இதுதொடர்பான உத்தரவை பிறப்பிக்கிறது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. https://webcast.gov.in/events/MTc5Mg– இணையதளத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா இன்றுடன் ஓய்வு பெறுவதை ஒட்டி அவரது அமர்வின் விசாரணை ஒளிபரப்புசெய்யப்படுகிறது. அடுத்த தலைமை நீதிபதி யு.யு லலித் ஹேமா கோலி ஆகியோருடன் வழக்கை நேரலையில் விசாரிக்கிறார் ரமணா..

Categories

Tech |