Categories
மாநில செய்திகள்

Breaking: சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு …!!

தமிழகம் முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தியேட்டர்கள், பெரிய பெரிய கடைகள், மால்கள் திறக்க அனுமதியில்லை. தனியாக செயல்படுகின்ற மல்லிகை உட்பட பல சரக்கு மற்றும் காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதி உள்ளன.

இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அழகு நிலையங்கள்,  சலூன்கள்,  பியூட்டி பார்லர்கள் இயங்க அனுமதி இல்லை. அதே போல் அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில்  பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

ரெஸ்டாரன்ட், ஹோட்டலிலும் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.விடுதிகள், ஹோட்டல், லாட்ஜ் தங்கியுள்ள வாடிக்கையாளர்கள் அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்கவேண்டும்.  உணவுக் கூடங்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

அனைத்து மின் வணிக சேவைகள் (ஈகாமர்ஸ்)  வரையறுக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டிற்கு இயங்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அனைத்து வழிபாட்டு தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |