சாத்தன்குளத்தில் சாத்தன்குளத்தில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி விசாரணை நடத்தி வருகின்றார்.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் மரணமடைந்ததையடுத்து இந்த வழக்கு விசாரணையை தாமாக முன்வந்து விசாரணை நடத்திய மதுரை உயர்நீதிமன்றத்தில் கிளை, இந்த வழக்கை தற்காலிகமாக சிபிசிஐடி மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமார் தலைமையில் மூன்று குழுக்கள் சாத்தான்குளம் பகுதிகளில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் தற்போது தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி முரளி ஜெயின் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் கூறி இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என கேட்டறிகின்றார். மேலும் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்து ஆறுதல் கூறினார்.